பிரபல இயக்குனர் சிவகார்த்திகேயனை அணுகினாரா?
25 வைகாசி 2024 சனி 14:02 | பார்வைகள் : 1474
சூர்யா நடித்த ’சூரரை போற்று’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா என்பதும் இந்த படம் தேசிய விருதுகளை அள்ளி குவித்தது என்பது தெரிந்தது. இந்த நிலையில் மீண்டும் சூர்யாவுடன் இணைந்து ’புறநானூறு’ என்ற படத்தை இயக்க சுதா கொங்கரா திட்டமிட்டு இருந்த நிலையில் அந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் இந்த படம் திடீர் என டிராப் என்று கூறப்பட்டதை அடுத்து சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திற்கு சென்றுவிட்டார்.இதனை அடுத்து சுதா கொங்கரா தற்போது சிவகார்த்திகேயனிடம் ஒரு கதையை கூறி இருப்பதாகவும் அவரும் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்கரா இணையும் படம் குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் இந்த படம் சூர்யா நடிக்க இருந்த ’புறநானூறு’ கதையா அல்லது வேறு கதையா என்பது தெரியவில்லை என்றாலும் விரைவில் இது குறித்த தகவல் கசியும் என்று கூறப்படுகிறது.