Paristamil Navigation Paristamil advert login

2 ஆண்டுகளில் வெள்ளையாக மாறிய கருப்பு நாய்

2 ஆண்டுகளில் வெள்ளையாக மாறிய கருப்பு நாய்

5 வைகாசி 2024 ஞாயிறு 06:51 | பார்வைகள் : 182


சில அரிய நோய்கள் மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளையும் தாக்குகின்றன. அதேபோல் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட கருப்பு நாய் ஒன்று 2 ஆண்டுகளில் முற்றிலும் வெள்ளையாக மாறியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தோல் இயற்கையான நிறத்தை இழந்து வெளிர் வெள்ளை நிறமாக மாறும் நிலையை விட்டிலிகோ என்று அழைக்கப்படுகிறது. 

இந்த அரிய நோயால் சில மனிதர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாய்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் ஓக்லஹோமாவைச் சேர்ந்த ஸ்மித் என்பவரால் வளர்க்கப்பட்ட பஸ்டர் என்ற 4 வயது நாய் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் கருப்பாக இருந்தது.

ஆனால், விட்டிலிகோ நோயால் கடந்த 2 ஆண்டுகளில் படிப்படியாக நிறம் மாறி தற்போது முற்றிலும் வெண்மையாக மாறியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை reddit தளத்தில் வெளியிட்டு, இணையத்தில் வேகமாக பரவி வருகிறது

வர்த்தக‌ விளம்பரங்கள்