Paristamil Navigation Paristamil advert login

திருமணமான 3 நிமிடத்தில் நடந்த விவாகரத்து..... வினோத சம்பவம் 

திருமணமான 3 நிமிடத்தில் நடந்த விவாகரத்து..... வினோத சம்பவம் 

24 ஆடி 2024 புதன் 08:51 | பார்வைகள் : 413


குவைத் நாட்டில் திருமணம் நடந்து முடிந்த 3 நிமிடத்தில் விவாகரத்து நடந்த வினோத சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

குவைத் நாட்டில் எல்லா எதிர்பார்ப்புகளுடன் திருமணம் ஒன்று நடைபெற்றது. பின்னர், திருமண நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்து எல்லோரும் வீட்டிற்கு கிளம்பு தயாராகியுள்ளனர்.

அப்போது, மணமகள் திடீரென கால் தவறி கீழே விழுந்தார். உடனே அந்த மணமகன் மணமகளை பார்த்து 'பார்த்து நடக்கத்தெரியாதா முட்டாள்' என்று திட்டிவிட்டார்.

இதனால் மனமுடைந்து போன மணமகள் இவருடன் எப்படி நாம் காலம் முழுவதும் வாழ போகிறோம் என்று நினைத்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் உடனே நீதிமன்றத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி எங்களை பிரித்து வையுங்கள் என்று கோரிக்கை வைத்தார். அதன்படி, நீதிமன்றமும் அவரது கோரிக்கையை ஏற்று திருமண பந்தத்தை ரத்து செய்து விவாகரத்து கொடுத்தது.

இந்த சம்பவம் அந்த நாட்டில் நடந்த குறுகலான பந்தம் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், 'மரியாதையற்ற உறவுகள் ஆரம்பத்திலேயே முடிவடைந்துவிடும்' என்று பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2014 -ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஒரு திருமணம் 90 நிமிடத்தில் விவாகரத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.      

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்