Paristamil Navigation Paristamil advert login

ஓட்ஸ் பான்கேக்

ஓட்ஸ் பான்கேக்

2 புரட்டாசி 2024 திங்கள் 15:22 | பார்வைகள் : 577


பொதுவாக உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், காலை உணவில் ஓட்ஸ் சேர்த்து கொள்வது வழக்கமாகும். ஓட்ஸை எப்போதும் கஞ்சியாக செய்து குடிப்பார்கள், அதற்கு பதிலாக காரமான ஓட்ஸ் பான்கேக் செய்து பாருங்க, அதன் சுவை இனிமையாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இதில் ஓட்ஸ் மற்றும் காய்கறிகள் உள்ளன. எனவே காலை உணவில் இதை சேர்த்துக் கொள்வது, நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக இருக்க உதவுகிறது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த காலை உணவாக இருக்கும். இப்போது காரமான ஓட்ஸ் பான் கேக்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

விளம்பரம்

தேவையான பொருட்கள் : 

ஓட்ஸ் - ஒரு கப்

கோதுமை மாவு - அரை கப்

மோர் - அரை கப்

முட்டை - ஒன்று

வெங்காயம் - ஒன்று

கேரட் - 2-3

குடைமிளகாய் - 1

பேக்கிங் பவுடர் - ஒரு ஸ்பூன்

பேக்கிங் சோடா - அரை ஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

சீரக தூள் - அரை ஸ்பூன்

மிளகாய் - இரண்டு

எண்ணெய்/வெண்ணை - தேவைக்கேற்ப

செய்முறை:

காலை உணவைத் தயாரிக்க முதலில் ஓட்ஸை தண்ணீரில் பத்து நிமிடம் ஊற வைக்கவும். பின் மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைக்கவும்.

இந்த ஓட்ஸ் மாவை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைக்கவும்.

அதில் சீரக தூள், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றை சேர்க்கவும்.

மற்றொரு கிண்ணத்தில் மோர், முட்டை மற்றும் நறுக்கிய வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

நன்றாக கலக்கிய பிறகு, ஓட்ஸின் கலவையில் சேர்க்க வேண்டும்.

பிறகு நறுக்கிய கேரட், குடைமிளகாய், தேவைக்கேற்ற உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

ஓட் கேக்கிற்கான மாவை தயார் செய்த பிறகு, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் உங்கள் தேவைக்கேற்ப சிறிது எண்ணெய் ஊற்றவும். நீங்கள் எண்ணெயைத் தவிர்க்க விரும்பினால், கடாயில் வெண்ணெய் சேர்க்கலாம்.

எண்ணெய் அல்லது வெண்ணெய் சூடானதும், ஒரு கரண்டி ஓட்ஸ் மாவை ஊற்றி பரப்பவும். மேற்பரப்பில் குமிழ்கள் தோன்றும் வரை சமைக்கவும்.

இருபுறமும் கோல்டன் பிரவுன் நிறத்திற்கு வரும் வரை சமைக்கவும். அதன் பிறகு, அதை ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும்.

அவ்வளவுதான் மசாலா ஓட்ஸ் பான் கேக் தயார். இது மிகவும் சுவையானது. இதை நீங்கள் சாஸ் அல்லது பச்சை சட்னியுடன் சூடாக பரிமாறலாம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்