பாஜகவில் இணைந்த இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா
6 புரட்டாசி 2024 வெள்ளி 12:12 | பார்வைகள் : 662
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்துள்ளார்.
ரவீந்திர ஜடேஜா செப்டம்பர் 5 வியாழக்கிழமை, பாஜகவில் இணைந்தார்.
ஜடேஜாவின் மனைவி ரிவாபா குஜராத் மாநிலம் ஜாம்நகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஜடேஜா, டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
மனைவி ரிவாபாவுடன் இணைந்து ஜடேஜா பலமுறை பிரசாரம் செய்துள்ளார். கடந்த பொதுத்தேர்தலின் போதும் ரிவாபாவுடன் இணைந்து பாஜகவுக்காக பிரச்சாரம் செய்துள்ளார்.
ஜடேஜா 72 டெஸ்ட் போட்டிகளில் 3036 ஓட்டங்களும், 294 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். 197 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2756 ஓட்டங்களையும், 220 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஜடேஜா 74 டி20 போட்டிகளில் விளையாடி 515 ஓட்டங்கள் மற்றும் 54 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ரவீந்திர ஜடேஜா 2009-ஆம் ஆண்டு இந்தியாவுக்காக டி20 போட்டியில் அறிமுகமானார். இந்த வடிவத்தில், அவர் மொத்தம் 74 போட்டிகளில் விளையாடினார். அவர் 127.16 ஸ்ட்ரைக் ரேட்டில் 515 ஓட்டங்கள் எடுத்தார் மற்றும் 54 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஜடேஜா இடது கை பந்து வீச்சாளர். 2009 முதல் 2024 வரை டி20 அணியில் விளையாடினார். இந்த நேரத்தில் அவர் மொத்தம் 30 போட்டிகளில் விளையாடினார். இதில் ஜடேஜா 130 ஓட்டங்கள் எடுத்து 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே நேரத்தில் ஆசிய கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடினார். இதில் அவர் இரண்டு இன்னிங்ஸ்களில் 35 ஓட்டங்கள் எடுத்தார்.
உலகக் கோப்பையில் ஜடேஜாவால் சிறப்பாக எதுவும் செய்ய முடியவில்லை. 2024 டி20 உலகக் கோப்பையில் 8 போட்டிகளில் ஐந்து இன்னிங்ஸ்களில் ஜடேஜா 36 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.
இந்த நேரத்தில் அவரது ஸ்கோர் 2, 17, 9, 7, 10 ஆகும். அதுமட்டுமின்றி, பந்துவீச்சிலும் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.