இலங்கை கேப்டனின் எழுச்சி! போட்டியை சமனில் முடித்தது குறித்து அவர் கூறிய விடயம்
3 ஆவணி 2024 சனி 09:45 | பார்வைகள் : 522
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியை சமன் செய்தது குறித்து இலங்கை கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்தார்.
கொழும்பில் நடந்த இலங்கை, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது.
இப்போட்டியில் இந்திய அணி 231 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்தபோது கோலி (24), கே.ராகுல் (31) ஆகிய முக்கிய விக்கெட்டுகளை ஹசரங்கா கைப்பற்றினார்.
அதேபோல் அணித்தலைவர் சரித் அசலங்கா (Charith Asalanka) தனது பந்துவீச்சில் கடைசிகட்ட விக்கெட்டுகளான ஷிவம் தூபே (25), அர்ஷ்தீப் சிங் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்த, இந்திய அணி 230 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
துடுப்பாட்டத்தில் தொடர்ந்து சொதப்பி வரும் அசலங்கா, 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கை அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.
அவர் போட்டி சமன் ஆனது குறித்து கூறியபோது, ''மொத்தமாக நாங்கள் இந்த இலக்கை வைத்து defend செய்ய முடியும் என்று நினைத்தேன். நான் அதை செய்தேன். ஆனால் அவற்றை 230க்கு கீழ் கட்டுப்படுத்த இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்க வேண்டும்.
மதியம் அது மேலும் மாறியது. Lights-களின் கீழ் துடுப்பாட்டம் செய்வது எளிதானது. இடக்கை வீரர் துடுப்பாட வந்தார், அப்போது நிறைய சுழன்றால் நான் பந்துவீசலாம் என்று நினைத்தேன்.
மைதானத்தில் வீரர்களின் துடிப்பான செயல்பாடுகள் மற்றும் இரண்டாம் பாதியில் வீரர்கள் விளையாடிய விதம் மூலம் நான் மகிழ்ச்சியடைந்தேன். துனித்தின் ஆட்டம் மற்றும் நிசங்காவின் துடுப்பாட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது'' என தெரிவித்தார்.