'கோட்' படத்தின் சிங்கிள் பாடல் வெளியானது !
3 ஆவணி 2024 சனி 14:20 | பார்வைகள் : 1042
தளபதி விஜய் நடித்த ’கோட்’ படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் ஸ்பார்க் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்த இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவும் வர்ஷா பாலு என்பவரும் பாடி இருக்க, கங்கை அமரன் இந்த பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் முதல் முறை கேட்கும் போது அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எதிர்பார்த்தது போலவே இந்த பாடல் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகிய இருவருக்கும் ஆன டூயட் பாடல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கம்போல் விஜய்யின் அட்டகாசமான நடன ஸ்டெப்கள், மீனாட்சி சவுத்ரியின் கிளாமர் ஆகியவை இந்த பாடலில் இருப்பதை அடுத்து நிச்சயம் இந்த பாடல் திரையில் தோன்றும் போது ரசிகர்கள் எழுந்து நின்று ஆட்டம் போட வைக்கும் அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் விஜய் ரசிகர்களை முழுமையாக திருப்தி செய்யும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.