Paristamil Navigation Paristamil advert login

“வடக்கை அபிவிருத்தி செய்வோம்” - ஜனாதிபதி வாக்குறுதி

“வடக்கை அபிவிருத்தி செய்வோம்” - ஜனாதிபதி வாக்குறுதி

3 ஆவணி 2024 சனி 15:57 | பார்வைகள் : 931


யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாண மக்கள் நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்ற போதிலும், அந்த மாகாணத்தில் பாரிய பொருளாதார திறன் காணப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த சந்தர்ப்பங்களைப் வடக்கு மாகாணம் உட்பட முழு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் நேற்று நடைபெற்ற யாழ்.மாவட்ட கல்வியியலாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுடனான சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் தெரிவித்தார்.

தேர்தல் மேடைகளில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அவற்றை நிறைவேற்ற கடன் பெற்றதாலேயே நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் கட்டமைப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதே தவறை மீண்டும் நடக்க அனுமதிக்காமல் புதிய பொருளாதார மற்றும் அரசியல் முறையில் முன்னேறிச் செல்வதற்கு பங்களிப்பது நாட்டிலுள்ள அனைத்து கல்வியியலாளர்கள், தொழில் வல்லுநர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் ஏனையவர்களின் பொறுப்பாகும் என்பதையும் வலியுறுத்தினார்.

இந்த நாட்டில் இனப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் எனவும், பெரும்பான்மையான சிங்கள, பௌத்த மக்களுக்கும் முதன்மை இடம் கிடைத்தாலும், அனைவரையும் சமமாக நடத்துதல், மற்றும் பாலினச் சமத்துவம் உள்ளிட்ட விடயங்களை இதன்போது கருத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அத்துடன், தமிழ் மொழியையும் சிங்கள மொழியையும் ஊக்குவிப்பதற்கான முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்வரும் காலங்களில் தமிழ் நாட்டில் ஏற்படவிருக்கும் பொருளாதார வளர்ச்சியுடன், மற்றவர்களுக்கு இல்லாத வாய்ப்புகள் தமிழ் பேசும் இலங்கையர்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்