AI ஏற்படுத்தக்கூடிய அபாயங்கள் - எலான் மஸ்க்
4 ஆவணி 2024 ஞாயிறு 09:54 | பார்வைகள் : 677
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ஏஐ தொழில்நுட்பம் பற்றி தொடர்ச்சியாக கருத்து பதிவிட்டு வருகிறார்.
அந்த வரிசையில், அவர் ஏஐ ஏற்படுத்தக்கூடிய அபாயங்கள் பற்றி மனம்திறந்துள்ளார்.
சமீபத்திய பேட்டியில், "ஏஐ தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சி கவலை கொள்ள செய்கிறது.
சின்ன விஷயங்களில் கூட பொய் சொல்லும் அளவுக்கு ஏஐ தொழில்நுட்பம் அறிவூட்டப்பட்டு இருக்கிறது."
"தற்போது சின்ன விஷயங்களாக இருப்பவை, நாளடைவில் பெரிதாக மாறும்.
மேலும் மக்கள் இதனை அதிகளவு பயன்படுத்த துவங்கும் போது இன்னும் அதிகளவு பொய் சொல்லும்," என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், குறைந்து வரும் குழந்தை பிறப்பு எண்ணிக்கையும் தனக்கு கவலையை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
இது குறித்து பேசும் போது, "கடந்த கால வரலாறுகளின் குழந்தை பிறப்பு குறைவதே நாகீரக வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது.
இதில் இருந்து மனித இனம் மீண்டுவரவில்லை எனில், இதே நிலை மீண்டும் எழுவதை யாரும் தடுக்க முடியாது," என்றார்.