சீரியல் நடிகை சித்ரா வழக்கில் அதிரடி தீர்ப்பு..!
10 ஆவணி 2024 சனி 12:32 | பார்வைகள் : 1207
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த விஜே சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அவரது கணவர் உள்பட ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சின்னத்திரை நடிகை விஜே சித்ரா ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ உள்பட பல சீரியல்களில் நடித்திருந்த நிலையில் நடந்த 2020 ஆம் ஆண்டு திடீரென நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கி இருந்த போது தற்கொலை செய்து கொண்டார்.
அவருடன் அவரது கணவர் ஹேம்நாத் என்பவரும் தங்கி இருந்ததை அடுத்து சித்ராவை தற்கொலைக்கு அவர் தூண்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் அவர் ஜாமீனில் வெளியான நிலையில் இந்த வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில் 'விஜே சித்ரா கொலை வழக்கில் அவரது கணவர் தான் குற்றவாளி என்பதை நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் இல்லை என்பதால் அவர் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.