Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் நிறைவு விழா.. Stade de France கூரையில் இருந்து குதித்த Tom Cruise..!!

ஒலிம்பிக் நிறைவு விழா.. Stade de France கூரையில் இருந்து குதித்த Tom Cruise..!!

12 ஆவணி 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 3697


ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நாள் நிகழ்வுக்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் பிரபல திரைப்பட நடிகர் Tom Cruise, நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு வருகை தந்தார்.

பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், நிகழ்ச்சி இடம்பெற்ற Stade de France அரங்கின் கூரையில் இருந்து குதித்து, பின்னர் அரங்கிற்குள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகை தந்தார். அதன்போது மோட்டார் சைக்கிளில் அமெரிக்க கொடி பறக்கவிடப்பட்டிருந்தது.

2028 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில் இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒலிம்பிக் தீபத்தை எடுத்துச் செல்ல அவர் வருகை தந்ததாக காட்சி சித்தரிக்கப்பட்டது.

நடிகர் Tom Cruise, அமெரிக்கா போன்று பிரான்சிலும் மிக ஏராளமான ரசிகர்களைக் கொண்டவர். குறிப்பாக Fallout திரைப்படமாகட்டும்,  Mission Impossible திரைப்படமாகட்டும் பரிசில் படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. Rond-Point de l'Étoile வீதியில் எதிர் திசையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் செல்லும் காட்சி பிரெஞ்சு ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்று ஆகும். அத்துடன் அத்திரைப்படம் பிரான்சில் அதிகநாட்கள் ஓடி வசூல் சாதனையும் புரிந்திருந்தது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்