சருமத்தை பளபளப்பாக்கும் பால்..
22 புரட்டாசி 2024 ஞாயிறு 11:36 | பார்வைகள் : 1009
அனைத்து தோல் பராமரிப்புப் பொருட்களிலும் பால் முக்கிய மூலப்பொருளாகும். இது சருமத்திற்கு இயற்கையான பொலிவை தருகிறது. பாலில் லாக்டிக் அமிலம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இது சருமத்திற்கு ஊட்டமளித்து ஈரப்பதமாக்குகிறது. இதனால் சருமத்தில் உள்ள மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் குறையும் மற்றும் முகப்பரு, சரும எரிச்சலை குணப்படுத்த உதவுகிறத
மேலும் பால் சருமத்தின் நிறத்தை பிரகாசமாக்க உதவுகிறது. பாலில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், பொலிவாகவும் மாற்றுகிறது. எனவே உங்கள் சரும பராமரிப்பு வழக்கத்தில் பச்சை பாலை சேர்த்துக்கொள்வது, பளபளப்பான சருமத்தை பெற உதவும்.
க்ளென்சர் : பாலை இயற்கை க்ளன்சராக பயன்படுத்தலாம். இதற்கு பச்சைப் பாலை ஒரு காட்டன் பஞ்சில் நனைத்து, அதை உங்கள் முகத்தில் மெதுவாகத் துடைத்து காய விடவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி இயற்கையாகவே மென்மையான மற்றும் பளபளப்பான நிறத்தை பெறும்.
ஸ்க்ரப் : ஓட்ஸ் அல்லது அரிசி மாவுடன் பச்சைப் பாலை கலந்து பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளவும். இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் தடவி ஸ்கரப் செய்து வந்தால் சருமத்தில் உள்ள இறந்த சரும செல்கள் நீங்கி சருமம் பிரகாசமடையும். எளிதில் செய்யக்கூடிய இந்த ஃபேஸ் ஸ்க்ரப் உங்கள் சருமத்திற்கு ஊட்டமளிக்கும் மற்றும் உங்கள் சருமம் இயற்கையான பிரகாசத்தை அடைய உதவும்.