Paristamil Navigation Paristamil advert login

ஏ.ஐ. மூலம் ஈசியா எடிட் செய்யலாம்.. போட்டோஸ் ஆப்-ஐ அப்டேட் செய்த கூகுள்

ஏ.ஐ. மூலம் ஈசியா எடிட் செய்யலாம்.. போட்டோஸ் ஆப்-ஐ அப்டேட் செய்த கூகுள்

27 புரட்டாசி 2024 வெள்ளி 10:32 | பார்வைகள் : 1103


கூகுள் நிறுவனம் தனது கூகுள் போட்டோஸ் செயலியின் வீடியோ எடிட்டரில் புதிய சேவைகளை சேர்த்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. புதிய சேவைகள் வீடியோ எடிட் செய்வதை எளிமையாகவும், அதிக பயனுள்ளதாகவும் மாற்றும்.

இதுவரை இல்லாத அளவுக்கு வீடியோ எடிட் செய்வதை எளிமையாக்கவே புதிய வசதிகள் வழங்கப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. புது அப்டேட் மூலம், கூகுள் போட்டோஸ் செயலியில் அப்டேட்டெட் ட்ரிம் டூல் (Updated Trim Tool), ஆட்டோ என்ஹன்ஸ் பட்டன் (Auto Enhance Button), ஸ்பீடு (Speed Tool) போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.

இதுதவிர ஏஐ சார்ந்த பிரீசெட் அம்சங்கள் வழங்கப்படுகிறது. இவை எடிட்டிங்கில் லைட்டிங் அட்ஜஸ்ட் செய்வது, ஸ்பீடு கண்ட்ரோல், வீடியோக்களை மேம்படுத்தும் எஃபெக்ட்கள் வழங்குகின்றன. புதிய அம்சங்கள் அடங்கிய அப்டேட் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் இந்த அம்சங்கள் அனைவருக்கும் வழங்கப்படும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்