ப்ளூடூத் காலிங், 7 நாள் பேட்டரி பேக்கப் கொண்ட புது ஸ்மார்ட்வாட்ச்.....
30 புரட்டாசி 2024 திங்கள் 11:16 | பார்வைகள் : 473
ஐடெல் நிறுவனத்தின் முற்றிலும் புிய ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் ஐடெல் ஆல்பா 2 என அழைக்கப்படுகிறது. சமீபத்தில் ஐடெல் நிறுவனத்தின் ரிதம் ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை ஐடெல் ஆல்பா 2 மாடலில் 2 இன்ச் HD ஸ்கிரீன், 150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்களுக்கான சப்போர்ட், ப்ளூடூத் காலிங் சப்போர்ட், இன்-பில்ட் மைக், டயல் பேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் உடல் ஆரோக்க்கியத்தை டிராக் செய்ய ஏதுவாக ஹார்ட் ரேட், SpO2, ஸ்லீப் மற்றும் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. மேலும் பாஸ்வேர்டு பாதுகாப்பு, அதிகபட்சம் ஏழு நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
ஐடெல் ஆல்பா 2 மாடல் பிளாக், டார்க் புளூ மற்றும் ரோஸ் கோல்டு நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏர்Kனவே துவங்கி நடைபெற்று வருகிறது.