Paristamil Navigation Paristamil advert login

பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தமிழ் மக்கள் கூட்டணி தீர்மானம்!

பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தமிழ் மக்கள் கூட்டணி தீர்மானம்!

30 புரட்டாசி 2024 திங்கள் 13:53 | பார்வைகள் : 1300


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இம்முறை பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளது. 

 
இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் வைத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. 
 
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்புடன் இணைந்து சங்கு சின்னத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கியது. 
 
இந்தநிலையில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பில் உள்ளடங்கி இருந்த கட்சிகள் அனைத்தும் எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் அதே கூட்டணியாகப் போட்டியிடுவதற்குத் தீர்மானித்து அண்மையில் அறிவித்தது.
 
எவ்வாறாயினும் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு தமது கட்சி ஏகமானதாகத் தீர்மானித்திருப்பதாகத் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்