இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
30 புரட்டாசி 2024 திங்கள் 16:15 | பார்வைகள் : 1338
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (30) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293 ரூபாய் 50 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 302 ரூபாய் 56 சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 391 ரூபாய் 23 சதம், விற்பனைப் பெறுமதி 406 ரூபாய் 24 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 325 ரூபாய் 89 சதம், விற்பனைப் பெறுமதி 339 ரூபாய் 30 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 346 ரூபாய் 1 சதம், விற்பனைப் பெறுமதி 362 ரூபாய் 56 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபாய் 60 சதம், விற்பனைப் பெறுமதி 225 ரூபாய் 34 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201 ரூபாய் 15 சதம், விற்பனைப் பெறுமதி 211 ரூபாய் 29 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 5 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 13 சதம்.