யாழில் காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
9 புரட்டாசி 2024 திங்கள் 14:27 | பார்வைகள் : 1369
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் அடிகாயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்றைய தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
அல்லைப்பிட்டி 03ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த கஜேந்திரன் (வயது 43) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
அப்பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டடம் ஒன்றின் அருகில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலத்தில் அடிகாயங்கள் காணப்பட்ட நிலையில் , சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் யாழ்ப்பாண தடயவியல் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு சென்று தடயவியல் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.