Paristamil Navigation Paristamil advert login

கவுதம் கார்த்திக் அரசியலில் குதிக்கிறாரா ?

கவுதம் கார்த்திக் அரசியலில் குதிக்கிறாரா ?

12 புரட்டாசி 2024 வியாழன் 09:52 | பார்வைகள் : 1106


தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான கவுதம் கார்த்திக் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படம் அரசியல் கதையம்சம் கொண்டது என்பது தெரிய வந்துள்ளது.

நவரச நாயகன் கார்த்திக் மகன் கெளதம் கார்த்திக் ஏற்கனவே சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருடைய இன்றைய பிறந்த நாளில் புதிய திரைப்பட அறிவிப்பு ஒன்று சற்று முன் வெளியாகி உள்ளது..

இன்று கௌதம் கார்த்திக் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிறந்தநாள் தெரிவித்த படக்குழுவினர் அவருடைய 19வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்திற்கு பிரபல இயக்குனர் ராஜு முருகன் வசனம் எழுதுவதாகவும் அவருடைய உதவியாளர் தினா ராகவன் என்பவர் இயக்குனராக இந்த படத்தின் மூலம் அறிமுகமாக இருப்பதாகவும் தெரிகிறது.

அரசியல் கதையம்சம் கொண்ட இந்த படம் தென் சென்னையில் வாழும் சாமானியனின் எதார்த்த வாழ்வியலோடு அரசியலை நகைச்சுவையாக கூறும் படமாக உருவாகிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்