நாளைமுதல் (15/09) SNCF பயணிகளுக்கு பயணப்பொதிகளுக்கு வரம்பு.
14 புரட்டாசி 2024 சனி 06:52 | பார்வைகள் : 2420
பிரான்சின் தொலைதூர தொடரூந்து சேவைகளை வழங்கும் SNCF தங்களின் தொடரூந்து சேவைக்கான TGV, inOui, மற்றும் Intercités சேவைகளில் பயணிக்கும் பயணிகளுக்கு அவர்கள் எடுத்து செல்லும் பயணப் பொதிகளின் அளவில் புதிய வரம்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை மீறுவோர் மீது 50€ அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி ஒரு பயணி நீள, அகல , உயரமாக 70x90x50 cm அளவு கொண்ட suitcase, hiking bag, sports bag (valise, sac de randonnée, sac de sport) பெரிய பொதியாகவும், கையில் கொண்டு செல்லும் பொதியின் அளவு 40x30x15 cmவும் அதேவேளை அந்தப் நொதியின் தன்மை backpack, shopping bag, computer bag, (sac à dos, cabas, sacoche d’ordinateur...) இருக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.