மாற்றுத்திறனாளிகளுக்கான போலி வாகன தரிப்பிட அட்டைகள், அபராதம் 75,000€
14 புரட்டாசி 2024 சனி 07:30 | பார்வைகள் : 3200
மாற்றுத்திறனாளிகள் இலவசமாகவும், இலகுவாகவும் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு சிறப்பு தரிப்பிட அட்டவணைகள் மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகத்தின் மூலம் (MDPH) வழங்கப்படுகிறது. குறித்த அட்டையுடன் ஐரோப்பா முழுவதும் இலவசமாகவும், இலகுவாகவும் வாகனங்களை மாற்றுத்திறனாளிகள் தரித்து நிறுத்த முடியும். குறித்த தரிப்பிடத்தில் ஏனைய வாகனங்கள் நிறுத்தப்பட்டால் 135€ அபராதம் விதிக்கப்படுவதோடு தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்தால் வாகனம் அப்புறப்படுத்தப்படும்.
இந்த நிலையில் குறித்த மாற்றுத்திறனாளிகள் அட்டவணைகள் இப்போது போலியான முறையில் தயாரிக்கப்பட்டு இணையத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. அவ்வாறான அட்டைகளை பாவித்து சாதாரண தரிப்பிடத்தில் மாற்றுத்திறனாளிகளின் அட்டையோடு தரித்து நிறுத்தப்படும் வாகனம் ஒன்றுக்கு 1,500€ அபராதம் விதிக்கப்படும். அதிவேளை குறித்த போலியான மாற்றுத்திறனாளியின் அட்டையோடு மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட தரிப்பிடத்தில் வாகனத்தை தரித்து நிறுத்தினால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 75,000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என ஐரோப்பாவுக்கான வீதி போக்குவரத்து கட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக காவல்துறையினர் மேற்கொண்ட விசேட கண்காணிப்பில் மேற்குறிப்பிட்ட தண்டனையை பலரும் பெற்று இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன, அதேபோல் மாற்றுத்திறனாளியின் தரிப்பிட அட்டையை மாற்றுத்திறனாளி வாகனத்தில் இல்லாத தருணத்தில் வேறு ஒரு சாரதி பயன்படுத்தி வாகனத்தை
தரித்து நிறுத்தினாலும் அபராதம் விதிக்கப்படும்.