Paristamil Navigation Paristamil advert login

பாராளுமன்றம் கலைப்பு.. €28 மில்லியன் யூரோக்கள் செலவு..!

பாராளுமன்றம் கலைப்பு.. €28 மில்லியன் யூரோக்கள் செலவு..!

18 புரட்டாசி 2024 புதன் 11:40 | பார்வைகள் : 2612


கடந்த ஜூன் மாதத்தில் பாராளுமன்றத்தைக் கலைத்து, புதிய தேர்தலுக்கு அறிவித்தார் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன். இந்த பாராளுமன்ற கலைப்புக்கு €28 மில்லியன் செலவானதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற ஊழியர்கள், உதவியாளர்கள், அரசியல் குழுக்களுடன் இணைந்து ஒப்பந்த அடிப்படையில் செயற்படும் கூட்டுப்பணியாளர்களுடனான ஒப்பந்த முறிவின் காரணமாக €23,500,000 யூரோக்கள் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலான கடன்கள் செலுத்தப்பட்டமைக்காக (crédits supplémentaires de fin de mandat) €7,500,000 யூரோக்கள் செலவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மொத்தமாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்காக இழப்பீடு, ஒப்பந்த முறிவு என பல விதங்களில் மொத்தமாக €28 மில்லியன் யூரோக்கள் செலவானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்