ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் மீண்டும் இணைகிறார்களா?
18 புரட்டாசி 2024 புதன் 12:19 | பார்வைகள் : 725
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது கணவர் தனுஷ் ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில், இருவரும் விவாகரத்துக்கு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பதும், அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதும் தெரிந்ததே.
விவாகரத்து மனு தாக்கல் செய்திருந்தாலும், இன்னும் இரு குடும்பங்களுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், குறிப்பாக ரஜினிகாந்த் தனது மகள் தனுஷுடன் வாழ வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திரையுலகை பொருத்தவரை கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்த உடனே சமூக வலைதளங்களில் இருந்து புகைப்படங்களை நீக்குவது, அன்ஃபாலோ செய்வது போன்ற செயல்கள் நடைபெறும். ஆனால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தை இன்னும் தனுஷை பின் தொடர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் ஓணம் பண்டிகையின் போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்ட புகைப்படத்திற்கு தனுஷ் முதல் ஆளாக லைக் செய்துள்ளார். இதனால், இருவரும் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக குழந்தைகள் நலனுக்காக இருவரும் இணைந்து வாழ வேண்டும் என்று அவர்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் விவாகரத்து மனுதாக்கல் செய்திருந்த போதிலும், இன்னும் சட்டபூர்வமான விவாகரத்து பெறவில்லை என்பதால், பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு ஏற்பட்டு, இருவரும் மீண்டும் இணைவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.