சூர்யா வின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி எப்போது?
18 புரட்டாசி 2024 புதன் 16:11 | பார்வைகள் : 926
நடிகர் சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முழுமையடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் இந்த படம் முதலில் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'வேட்டையன்' திரைப்படம் வெளியாகவிருப்பதால், 'கங்குவா' படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போகும் என்று செய்திகள் வந்தன.
இந்த நிலையில், 'கங்குவா' படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ கிரீன், தனது சமூக வலைதளத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், "நாளை காலை 11 மணிக்கு 'கங்குவா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து, சூர்யா ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் நாளைய அறிவிப்புக்கு காத்திருக்கின்றனர்.
சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் படம் 'கங்குவா'. இந்த படத்தை போட்டியின்றி தனியாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்கள். இதனால், அதிக திரையரங்குகளில் வெளியாகும் வாய்ப்பு உள்ளது.
இந்த படத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி, ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், ஜி. மாரிமுத்து, தீபா வெங்கட் மற்றும் கே.எஸ். ரவிகுமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க, வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். நிஷாத் யூசுப் படத்தொகுப்பில், சுமார் 350 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.