இலங்கையில் 21ஆம் திகதிவரை அமைதியான காலப்பகுதியாக அறிவிப்பு
18 புரட்டாசி 2024 புதன் 16:55 | பார்வைகள் : 706
ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
இந்த நிலையில், செப்டெம்பர் 21ஆம் திகதிவரை அமைதியான காலப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
இக்காலப்பகுதியில் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் முன்னெடுக்கப்படும் அவசியமற்ற பிரசாரங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.