செம்பருத்தி டீ-யில் இருக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..?
19 புரட்டாசி 2024 வியாழன் 15:41 | பார்வைகள் : 887
சில காலங்களுக்கு முன்பு வரை பால் டீ மட்டுமே மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது பால் இல்லாத டீ, ப்ளாக் டீ மற்றும் க்ரீன் டீ போன்றவை மக்களிடையே பிரபலமாகி வருகிறது. இவை உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் உள்ளதால் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றன. இதில் செம்பருத்தி செடியில் இருந்து செய்யப்படும் செம்பருத்தி டீ ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
விளம்பரம்
ஆரோக்கியமான உடலுக்கு ஏற்ற பல்வேறு ஊட்டச்சத்துகள் இந்த டீயில் உள்ளது. செம்பருத்தி டீ ஆனது இரத்த அழுத்தத்தைக் குறைப்பது, இதய ஆரோக்கியத்தை ஆதரிப்பது, எடை குறைப்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. செம்பருத்தி டீயில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிறைந்துள்ளதால், இது ஒட்டுமொத்த நல்வாழ்வையும் ஆதரிக்கிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது: செம்பருத்தி டீயில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை சமன் செய்கிறது. மேலும், சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாப்பதன் மூலம், வயதான தோற்றத்தை குறைக்க உதவுகின்றன மற்றும் இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன. இதுமட்டுமல்லாமல் இது சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கின்றன.
இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது: நம் உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இந்த செம்பருத்தி பூ டீ பயன்படுகிறது. இது மட்டும் இல்லாமல் உயர் இரத்த அழுத்தத்தைக் கணிசமாகக் குறைக்க உதவும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் இந்த செம்பருத்தி டீயில் உள்ளது. இந்த டீயில் இயற்கையில் டையூரிடிக் தன்மை இருப்பதால் இது சிறுநீர் கழித்தலை அதிகரித்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.