2023 ஆம் ஆண்டில் 735 வீடற்றவர்கள் உயிரிழப்பு.. !!
30 ஐப்பசி 2024 புதன் 17:18 | பார்வைகள் : 1256
சென்ற 2023 ஆம் ஆண்டில் பிரான்சில் 735 வீடற்றவர்கள் உயிரிழந்துள்ளதாக அகதிகளுக்கான தொண்டுநிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
”Les Morts de la Rue” எனும் தொண்டு நிறுவனம் இத்தகவலை இன்று ஒக்டோபர் 30 ஆம் திகதி வெளியிட்டுள்ளது. 735 எனும் இந்த எண்ணிக்கை முன்னர் எந்த ஆண்டுகளிலும் பதிவாகாத அதிகூடிய தொகையாகும்.
அதேவேளை, 2012 ஆம் ஆண்டு பிரான்சில் 143,000 வீடற்றவர்கள் வீதிகளில் படுத்துறங்கியிருந்ததாகவும், 2023 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 330,000 ஆக அது உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.