பணத்தை டிசைன் செய்யும் போட்டி - சுவிஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
31 ஐப்பசி 2024 வியாழன் 12:31 | பார்வைகள் : 476
சுவிட்சர்லாந்தில் அடுத்து அச்சடிக்கப்பட இருக்கும் பணத்தை கலைஞர்கள் வடிவமைக்கலாம் என சுவிஸ் தேசிய வங்கி கூறியுள்ளது.
சுவிஸ் தேசிய வங்கி, சுவிட்சர்லாந்தில் அடுத்து அச்சடிக்கப்பட இருக்கும் வடிவமைக்க, graphic artists வகை கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சுவிட்சர்லாந்திலுள்ள மலைகளை மையமாக வைத்து பணத்தை வடிவமைப்பது இலக்காகும்.
நாட்டிலுள்ள வடிவமைக்கும் கலைஞர்கள் இன்று இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
அவர்களில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கிடையில் போட்டி நடத்தப்படும். அந்தப் போட்டி பிப்ரவரி மாதம் துவங்க உள்ளது.