Paristamil Navigation Paristamil advert login

வருமானத்துக்கு ஏற்றால் போல் தரிப்பிடக்கட்டணம்!!

வருமானத்துக்கு ஏற்றால் போல் தரிப்பிடக்கட்டணம்!!

5 மார்கழி 2024 வியாழன் 10:57 | பார்வைகள் : 10816


தரிப்பிடக்கட்டணங்கள் ஒவ்வொரு நகரங்களுக்கும் வேறுபடும் என்பது அறிந்ததே. ஆனால் பிரான்சின் சில நகரங்களில் இந்த தரிப்பிடக்கட்டணங்கள் ஒவ்வொருவொருவரது வருமானத்தைப் பொறுத்து மாறுபடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் புதிதான ஒன்றல்ல.. Nantes மற்றும் Lille நகரங்களில் இது புழக்கத்தில் இருந்து தற்போது புதிதாக Rennes நகரில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் கொண்டவர்களும் - நிறைவான வருமானம் கொண்டவர்களும் ஒரே அளவுடைய தரிப்பிடக்கட்டணம் செலுத்துவதில் நியாயமில்லை என தெரிவிக்கப்பட்டு 30 முதல் 90% சதவீதம் வரை கட்டணம் மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, இந்த நடைமுறை நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் பின்பற்ற வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்