பாலக் பன்னீர்
29 கார்த்திகை 2024 வெள்ளி 15:09 | பார்வைகள் : 488
பாலக் பன்னீர் செய்ய தேவையான பொருட்கள்
கரம் மசாலா அரை ஸ்பூன்
மிளகாய் துாள்,
சீரகப் பொடி,
முந்திரி 10,
பன்னீர் 200 கிராம்
பசலைகீரை 250 கிராம் ,
வெங்காயம் ஒன்று,
தக்காளி - ஒன்று,
பச்சை மிளகாய் இரண்டு,
இஞ்சி சிறிய துண்டு,
சீரகம் ஒரு ஸ்பூன்,
மஞ்சள் துாள் கால் ஸ்பூன்,
மல்லி துாள் அரை ஸ்பூன்.
பாலக் பன்னீர் செய்ய முதலில் தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். அதேநேரம் எடுத்து வைத்துள்ள பாலக் கீரையினை சுத்தம் செய்து காம்பு நீக்கி வைக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் பாதியளவு தண்ணீருடன் கீரை சேர்த்து, ஐந்து நிமிடம் வேக வைக்கவும், பின்னர், வேக வைத்த கீரையினை ஒரு மிக்ஸி ஜாரில், இரண்டு பச்சை மிளகாய் தண்ணீருடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் நறுக்கிய பன்னீர் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். பதமாக வறுத்த இந்த பன்னீரை தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது, அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, சீரகம், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். இதை தொடர்ந்து, தக்காளி, மஞ்சள் துாள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.தக்காளி நன்கு வதங்கியதும், இதில் அரைத்து வைத்த கீரை, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும். தொடர்ந்து பன்னீர் மற்றும் முந்திரி சேர்த்து, பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் பாலக் பன்னீர் ரெடி.