நைஜிரியாவில் ஆற்றில் கவிழ்ந்த பயணிகள் படகு - 27 உடல்கள் மீட்பு
30 கார்த்திகை 2024 சனி 11:35 | பார்வைகள் : 721
நைஜீரியா படகு விபத்தில் 200 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் நடைபெற்ற சோகமான படகு விபத்து சம்பவத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோகி மாநிலத்திலிருந்து நைஜர் மாநிலத்திற்குச் சென்று கொண்டிருந்த இந்த படகில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் பெண் பயணிகள் ஆவார்.
விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், உள்ளூர் டைவிங் குழுவினர் மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவன மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர்.
இதுவரை 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
100-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
விசாரணையில், படகில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இது போன்ற விபத்துகள் நைஜீரியாவில் அடிக்கடி நிகழ்வது குறிப்பிடத்தக்கது.