Paristamil Navigation Paristamil advert login

யாழில் குழந்தையின் உயிரை பறித்த கச்சான் 

யாழில் குழந்தையின் உயிரை பறித்த கச்சான் 

14 தை 2025 செவ்வாய் 12:53 | பார்வைகள் : 1624


யாழ்ப்பாணத்தில் கச்சான் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

சுன்னாகம் பகுதியை சேர்ந்த சசிதரன் டானியா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

வீட்டில் நேற்று முன்தினம் கச்சானை உட்கொண்ட குழந்தை, இரவு தூங்க சென்ற நிலையில், நள்ளிரவு வேளை திடீரென நித்திரையால் எழுந்து மூச்சு விட சிரமப்பட்டு, அழுதுள்ளது.

அதனை அடுத்து பெற்றோர் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனையின் போது சுவாச குழாய்க்குள் கச்சான் முத்து ஒன்று சென்றமையாலேயே உயிரிழப்பு ஏற்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்