Paristamil Navigation Paristamil advert login

சரியான இறைச்சி இல்லையேல் 1500 முதல் 3000 யூரோக்கள் வரை அபராதம்.

சரியான இறைச்சி இல்லையேல் 1500 முதல் 3000 யூரோக்கள் வரை அபராதம்.

19 மாசி 2025 புதன் 10:22 | பார்வைகள் : 4736


உணவு வழங்கும் நிறுவனங்களுக்கு அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம் விவசாய அமைச்சர் Annie Genevard கடந்த 19-ம் திகதி இந்த செய்தியை வெளியிட்டுள்ளார். உணவகங்கள், பாடசாலை உணவகங்கள், பொது உணவகங்கள் அனைத்திலும் சமைக்கப்படும் பன்றி, கோழி, ஆட்டிறைச்சி அனைத்தும் எங்கே கொள்வனவு செய்யப்பட்டது, அவை பிறந்த காலம், வளர்ந்த இடம், இனப்பெருக்கம் இடம்பெற்ற காலம், இறைச்சிக்காக அவை கொல்லப்பட்ட காலம், போன்ற அனைத்து குறிப்புகளும் உணவகங்களில் பாதுகாத்து வைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை முதல் தடவை மீறுவோருக்கு 1,500 யூரோக்களும் மீண்டும் மீறுவோருக்கு 3,000   யூரோக்களும் அபராதம் விதிக்கப்படும் என அந்த செய்தி குறிப்பில் விவசாய அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். மாட்டிறைச்சிக்கு ஏற்கனவே 2002 முதல் இந்த கட்டுப்பாடு இருந்து வருகிறது.

பிரெஞ்சு தயாரிப்புகளின் தரத்தை எடுத்துக்காட்டவும், நுகர்வோர் நம்பிக்கையை வலுப்படுத்தவும், அதேவேளை இனப்பெருக்க காலத்தை, வளர்ப்பு காலத்தை, அவை உணவுக்காக கொல்லப்படும் காலத்தை முறைப்படுத்தவும் இந்த நடைமுறை மிகவும் அவசியமானது எனவும் விவசாய அமைச்சர் Annie Genevard மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டமானது உணவகங்கள் மட்டுமன்றி சமைத்த உணவை சந்தைகளில் விற்பனை செய்யும் தனி வியாபாரிகள், விழாக்களுக்கு உணவு வினியோகம் செய்கின்ற நிறுவனங்கள், அமைப்புகளுக்கு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்