Mistral's AI : கூகுளுக்கு போட்டியாக பிரெஞ்சு செயற்கை நுண்ணறிவு (AI) அறிமுகம்!

6 மாசி 2025 வியாழன் 16:56 | பார்வைகள் : 5432
கூகுளின் Gemini மற்றும் சீனாவின் DeepSeek போன்ற செயற்கை நுண்ணறிவு (A.I) இற்கு போட்டியாக பிரான்ஸ் களமிறங்கியுள்ளது. Mistral's AI என பெயரிடப்பட்ட இதனை iOS மற்றும் Android தொலைபேசிகளில் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து மூலமாகவோ, குரல் பதிவு மூலமாகவோ அல்லது புகைப்படம் ஒன்றை வழங்கியோ தகவல்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும், ஒரு கட்டுரையோ அல்லது ஒரு பத்தி எழுத்தையோ எழுதித்தரக்கூடிய திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு இதுவரை இணையத்தளமூடாக மட்டுமே இயங்கி வந்த நிலையில், தற்போது, அதற்கென பிரத்யேகமாக செயலி (App) வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மூன்று விதமான விருப்பத்தேர்வு கணக்குகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் இன்று இலவசம் எனவும், மற்றைய இரண்டும் மாதம் 15 மற்றும் 20 யூரோக்கள் கட்டணத்துடன் செயற்படும் பிரீமியம் கணக்குகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.