முன்னாள் ஜனாதிபதி நிகோலா சர்கோஷிக்கு இலத்திரனியல் காப்பு!!

8 மாசி 2025 சனி 07:00 | பார்வைகள் : 4502
'ஒட்டுக்கேட்டல்' குற்றச்சாட்டில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி நிகோலா சர்கோஷிக்கு இலத்திரனியல் காப்பு (bracelet électronique) அணிவிக்கப்பட உள்ளது.
இன்று பெப்ரவரி 7, சனிக்கிழமை நண்பகலுக்கு முன்னதாக இந்த கண்காணிப்பு காப்பு அணிவிக்கப்பட உள்ளது. சர்கோஷியின் மேல் முறையீடை நீதிமன்றம் கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி நிராகரித்திருந்தது. அதை அடுத்து அவருக்கு ஒரு வருடத்துக்கான இந்த காப்பு அணிவிக்கப்பட உள்ளது.
அதேவேளை, 2007 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துகாக லிபியாவில் இருந்து பணம் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டு, அதற்கான வழக்கு விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி பரிஸ் நீதிமன்றத்தில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.