Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்தின் வளர்ச்சியை பட்ஜெட் உறுதி செய்யும்: முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தின் வளர்ச்சியை பட்ஜெட் உறுதி செய்யும்: முதல்வர் ஸ்டாலின்

13 பங்குனி 2025 வியாழன் 19:17 | பார்வைகள் : 1329


முதன்முறையாக தமிழகத்திற்கான பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அவர், தமிழகத்தின் வளர்ச்சியை பட்ஜெட் உறுதி செய்யும் என கூறினார்.

தமிழகத்தின் 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட் சட்டசபையில் நாளை (மார்ச் 14) தாக்கல் செய்யப்பட உள்ளது. இன்று, அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட,

தமிழக பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். பொருளாதார ஆய்வு அறிக்கையை தமிழக அரசு வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* நடப்பு நிதி ஆண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8% ஆக இருக்கும்.

* வலுவான கொள்கையின் காரணமாக தமிழகத்தில் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் உள்ளது.

* தமிழகத்தின் தனி நபர் வருமானம் ரூ.2.78 லட்சமாக அதிகரிக்கும். இது தேசிய சராசரியை விட 1.64 மடங்கு அதிகம்.

* கொரோனா காலத்துக்குப் பிறகு தமிழக சேவைத் துறைகள் வேகமாக மீண்டெழுந்தன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்டாலின் பதிவு

நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில், மக்களுக்கு அரசு வழங்கிய நலத்திட்டங்கள் தொடர்பாக வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் பட்ஜெட். தமிழகத்தின் வளர்ச்சியை பட்ஜெட் உறுதி செய்யும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்