Paristamil Navigation Paristamil advert login

ஓட்ஸ் பொங்கல்

ஓட்ஸ் பொங்கல்

21 சித்திரை 2025 திங்கள் 14:23 | பார்வைகள் : 818


வழக்கமாக வீட்டில் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், பால் பொங்கல் போன்றவற்றை பெரும்பாலும் தொடர்ந்து செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் வித்தியாசமான முறையில் ஓட்ஸ் வைத்து பொங்கல் செய்யலாம்.

பொதுவாக ஓட்ஸ் பலரின் காலை உணவாக இருந்து வருகிறது, ஓட்ஸ் வைத்து கஞ்சி, போன்றவற்றை காலை சிற்றுண்டிக்கு எடுத்து வருவார்கள். அந்த வகையில் ஓட்ஸ் வைத்து சுவையான பொங்கல் செய்வது எப்படி என்று அதன் செய்முறை விளக்கத்தை இங்கு பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருள்கள்:  ஓட்ஸ் - அரை கப், பாசி பருப்பு - கால் கப், முந்திரி - ஆறு, சீரகம், மிளகு - ஒரு தேக்கரண்டி, நெய், உப்பு தேவையான அளவு.

செய்முறை முதலில் பாசி பருப்பை 10 நிமிடம் ஊற வைக்கவும். பின் பாசி பருப்பை மலர வேக வைத்து கொள்ளவும்.

வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் ஓட்ஸை போட்டு 5 நொடி வதக்கவும். பின் கால் கப்பிற்கு குறைவாக நீர் ஊற்றி ஓட்ஸை வேக வைக்கவும்.

ஓட்ஸ் குழைந்து வரும் போது, வேக வைத்த பாசி பருப்பு, உப்பு போட்டு சுருள கிளறவும். நெய்யில் சீரகம், மிளகு, முந்திரி சேர்த்து பொரித்து சேர்க்கவும். சுவையான ஓட்ஸ் பொங்கல் தயார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்