Paristamil Navigation Paristamil advert login

மூன்று சூரியன் கொண்ட கிரகம் கண்டுபிடிப்பு

மூன்று சூரியன் கொண்ட கிரகம் கண்டுபிடிப்பு

10 ஆடி 2016 ஞாயிறு 05:13 | பார்வைகள் : 9626


 மூன்று சூரியன்களைக் கொண்ட வேற்றுக் கிரகம் ஒன்றை வானியலாளர்கள் அவதானித்துள்ளனர். இங்கு மூன்று சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்த்தமனங்கள் நிகழ்கின்றன.

 
HD 131399Ab என்ற இந்த கிரகம் மூன்று நட்சத்திரங்கள் கொண்ட சூரிய மண்டலத்தை ஸ்திரமாக வலம்வருவதாக வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
பூமியில் இருந்து 340 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் இந்த கிரகம் 16 மில்லியன் ஆண்டு வயது கொண்டது என்பதோடு இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் மிக இளம் கிரகமாகவும் இது உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
பூமி 4.5 பில்லியன் ஆண்டு வயது கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
எமது வியாழனை விடவும் நான்கு மடங்கு பெரிதான இந்த கிரகத்தின் ஒரு பாதியில் மூன்று சூரியனும் காலையில் உதித்து மாலையில் அஸ்தமிக்கின்றன. மற்றைய பாதியில் இரு சிறிய சூரியன்களும் உதிக்கும்போது மூன்றாவது பெரிய சூரியன் அஸ்தமிப்பதால் அங்கு எப்போதும் பகல் வேளை இருக்கும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்