Paristamil Navigation Paristamil advert login

'விடாமுயற்சி' படத்திற்காக அதிரடி பிளான் போட்ட மகிழ் திருமேனி..!

'விடாமுயற்சி' படத்திற்காக அதிரடி பிளான் போட்ட மகிழ் திருமேனி..!

16 ஆவணி 2023 புதன் 04:34 | பார்வைகள் : 996


அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரிக்கும் ‘விடாமுயற்சி’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியான நிலையில் இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய அஜித், ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்புக்கு தயாராகி விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ‘விடாமுயற்சி’ படத்தின் திரைக்கதை மற்றும் ஸ்கிரிப்ட் எழுதும் பணி முழுவதும் முடிவடைந்து விட்டதாகவும் தனது ஸ்டைலில் ஒரு அதிரடி ஆக்சன் படத்தின் ஆரம்பகட்ட பணியை முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளில் என மூன்று ஷெட்யூலில் படத்தின் மொத்த படப்பிடிப்பை முடிக்க மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அனைத்தும் சரியாக திட்டமிட்டபடி நடந்தால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வர்த்தக‌ விளம்பரங்கள்