Paristamil Navigation Paristamil advert login

ரஜினி - விஜய்யை இணைத்து நெல்சன் படம் இயக்குவாரா? அது சாத்தியமா?

ரஜினி - விஜய்யை இணைத்து நெல்சன் படம் இயக்குவாரா? அது சாத்தியமா?

14 ஆவணி 2023 திங்கள் 03:37 | பார்வைகள் : 1935


இயக்குனர் நெல்சன், ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் இணைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் காலம் வரும்போது அதை செயல்படுத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய இருவரும் மாஸ் நடிகர்கள் என்றும் இருவரையும் இணைத்து படம் பண்ண வேண்டும் என்று ஒரு ஐடியா இருப்பதாகவும் ஆனால் அது மிகப்பெரியது என்றும் அதை சாத்தியமாக்க கூடிய நேரம் வரும்போது கண்டிப்பாக அதை செய்வேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் தான் இயக்கிய ’கோலமாவு கோகிலா’ ’டாக்டர்’ ’பீஸ்ட்’ மற்றும் ‘ஜெயிலர்’ ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களையும் இயக்கும் ஐடியா இருப்பதாகவும் விரைவில் அதை செயல்படுத்துவேன் என்றும் இயக்குனர் நெல்சன் பேட்டி அளித்துள்ளார்.

இதனை அடுத்து இயக்குனர் நெல்சனின் அடுத்தடுத்த படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை யாரும் முயற்சிக்காத ரஜினி - விஜய் ஆகிய இருவரையும் இணைத்து நெல்சன் ஒரு படம் இயக்குவாரா? அது சாத்தியமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்