Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் போட்டிகளின் போது இரஷ்ய கொடி பறக்காது - ஜனாதிபதி மக்ரோன்

ஒலிம்பிக் போட்டிகளின் போது இரஷ்ய கொடி பறக்காது - ஜனாதிபதி மக்ரோன்

7 புரட்டாசி 2023 வியாழன் 07:12 | பார்வைகள் : 4884


2024 ஆம் ஆண்டு பரிசில் இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போதுபோர்க்குற்றவாளிகளான இரஷ்யாவின் கொடி பறக்காது என ஜனாதிபதிஇம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். 

L'Equipe ஊடகத்துக்கு அவர் வழங்கிய செவ்வியின் போது இதனை அவர்குறிப்பிட்டார். ‘பரிசில் இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போதுஇரஷ்யாவின் கொடி பறக்கவிடமாட்டாது. இந்த போட்டிகளை அரசுநடாத்தவில்லை என்றபோதும், போர்க்குற்றவாளிகளின் கொடி பறப்பதை நான்விரும்பவில்லை. Thomas Bach (சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர்) இனை நான் நம்புகிறேன்” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்தார்.

அதேவேளை, இரஷ்ய வீரர்கள் விளையாட அனுமதிக்கப்படுவார்களா எனும்கேள்விக்கும் மக்ரோன் பதிலளித்தார். “இரஷ்ய வீரர்கள் தனிப்பட்ட முறையில் பலவருடங்களான பயிற்சியில் ஈடுபட்டு கனவோடு இருப்பார்கள். போர்க்குற்றவாளிகளின் தவறினால் அவர்கள் பாதிக்கப்படுவதை நான்விரும்பவில்லை!” என ஜனாதிபதி தெரிவித்தார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்