Paristamil Navigation Paristamil advert login

Val-de-Marne : வெடிகுண்டு அச்சுறுத்தல் - மூன்று பாடசாலைகள் வெளியேற்றம்!

Val-de-Marne : வெடிகுண்டு அச்சுறுத்தல் - மூன்று பாடசாலைகள் வெளியேற்றம்!

29 புரட்டாசி 2023 வெள்ளி 17:39 | பார்வைகள் : 4086


Val-de-Marne மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து, இன்று வெள்ளிக்கிழமை காலை மூன்று பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

Vitry-sur-Seine, Chennevières-sur-Marne மற்றும் Créteil ஆகிய நகரங்களில் உள்ள மூன்று பாடசாலைகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. அதையடுத்து பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் வெளியேற்றப்பட்டு, பாடசாலை முழுவதுமாக சோதனையிடப்பட்டது. ஆனால் பாடசாலைகளில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.

இல் து பிரான்சுக்குள் அண்மையில் பல பாடசாலைகளில் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்படுவது அதிகரித்துள்ளது. கல்விச் செயற்பாடுகள் இந்த போலி அச்சுறுத்தலினால் பாதிக்கப்படுவது கவலையளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்