ஒன்பது மாதங்களுக்க..."> ஒன்பது மாதங்களுக்க..."> ஒன்பது மாதங்களுக்க...">
Paristamil Navigation Paristamil advert login

எமில் : காணாமல் போன சிறுவனின் எலும்புகள் கண்டுபிடிப்பு!

எமில் : காணாமல் போன சிறுவனின் எலும்புகள் கண்டுபிடிப்பு!

2 சித்திரை 2024 செவ்வாய் 13:13 | பார்வைகள் : 5105


ஒன்பது மாதங்களுக்கு முன்னர் இரண்டரை வயது எமில் எனும் சிறுவன் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், சிறுவனின் 'எலும்புகள்' கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Alpes-de-Haute-Provence மாகாணத்தின் haut-Vernet எனும் மலையடிவார கிராமத்துக்கு சுற்றுலா சென்ற சிறுவனே காணாமல் போயிருந்தான். கடந்த வருடம் ஜூலை 8 ஆம் திகதி மாலை 5.15 மணிக்கு இறுதியாக எமிலியை கண்டிருந்தார்கள். அதன் பின்னர் சிறுவன் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. பல கட்டங்களாக, பல மாதங்களாக தேடுதல் பணிகள் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், மார்ச் 30 ஆம் திகதி மலையேற்றவாதி ஒருவர் சில மனித எலும்புத் துண்டுகளை கண்டுபிடித்தார். உடனடியாக அவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். 

அதையடுத்து கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் மீட்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. பின்னர் அவை எமிலியுடனுடையது தான் என உறுதிப்படுத்தப்பட்டது.

இச்சம்பவம் அப்பகுதியில் மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

 

எமிலியின் பெற்றோர்கள் La Bouilladisse (Bouches-du-Rhône)  நகரச் சேர்ந்தவர்கள். மிகவும் மதப்பற்றும் அமைதியான வாழ்க்கையும் வாழ்பவர்கள். அவர்களுக்கு பெருமளவான நன்கொடைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்

© Paristamil 2024