Paristamil Navigation Paristamil advert login

■ Val-de-Marne : இஸ்லாமிய பள்ளிவாசலுக்கு அருகே துப்பாக்கிச்சூடு.!

■ Val-de-Marne : இஸ்லாமிய பள்ளிவாசலுக்கு அருகே துப்பாக்கிச்சூடு.!

16 ஆனி 2024 ஞாயிறு 10:21 | பார்வைகள் : 1687


Val-de-Marne மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசலில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை துப்பாக்கிச்சூடு ஒன்று இடம்பெற்றுள்ளது.

Choisy-le-Roi நகரில் உள்ள பள்ளிவாசலிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காலை 9 மணி அளவில் நபர் ஒருவர் Eid el-Kebir கொண்டாட்டத்துக்காக பள்ளிவாசலுக்கு வருகை தந்த நிலையில், திடீரென அவர் மீது துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. கலிபர் துப்பாக்கியால் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.

ஆயுததாரி தப்பி ஓடிய நிலையில், துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பின்னர் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டதில் ஆயுததாரியை *Bonneuil-sur-Marne

நகரில் வைத்து சற்று முன்னர் கைது செய்தனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்