Paristamil Navigation Paristamil advert login

இல்-து-பிரான்சுக்குள் ஏழு மருத்துவ நிலையங்கள் மூடப்படுகிறது..!

இல்-து-பிரான்சுக்குள் ஏழு  மருத்துவ நிலையங்கள் மூடப்படுகிறது..!

11 ஆனி 2024 செவ்வாய் 10:15 | பார்வைகள் : 3057


இல் து பிரான்சுக்குள் உள்ள ஏழு மருத்துவ நிலையங்கள் மூடப்படுகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செஞ்சிலுவை சங்கத்தின் ( Croix-Rouge) நிதி உதவியுடன் நடாத்தப்படும் குறித்த மருத்துவ நிலையங்கள், நிதி பற்றாக்குறையினால் மூடப்பட உள்ளது. மருத்துவர்களுக்கான தேவை, தாதியருக்கான தேவை, மருந்துகளுக்கான தேவை என பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும், குறிப்பாக பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் உள்ள Richerand  நிலையமும், பரிசில் உள்ள ஏனைய நிலையங்களும், அதே போல் Hauts-de-Seine மாவட்டத்தில் உள்ள மருத்துவ நிலையமும் மூடப்பட உள்ளது.

Richerand  மருத்துவ நிலையத்துக்கு வருடத்துக்கு 20,000 நோயாளிகள் வருவதாகவும், அனைத்து மருத்துவ நிலையங்களையும் சேர்த்து வருடத்துக்கு 100,000 நோயாளிகள் வரை பார்வையிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்