Paristamil Navigation Paristamil advert login

சிறைச்சாலையை திறந்து வைத்த பிரதமர்!

சிறைச்சாலையை திறந்து வைத்த பிரதமர்!

7 ஐப்பசி 2023 சனி 10:39 | பார்வைகள் : 3187


வடக்கு பிரான்சின் Caen நகரில் சிறைச்சாலை ஒன்றை பிரதமர் Elisabeth Borne நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

பிரான்சில் உள்ள சிறைச்சாலைகளில் பலத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சிறைச்சாலைகளின் கொள்ளவை விட 120% வீதமாக கைதிகளின் எண்ணிக்கை உள்ளனர். இதனால் பல புதிய சிறைச்சாலைகளை நிர்மானிக்கும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று வெள்ளிக்கிழமை காலை Caen நகரில் சிறைச்சாலை ஒன்றை பிரதமர் Elisabeth Borne மற்றும் நீதித்துறை அமைச்சர் Éric Dupond-Moretti ஆகியோர் திறந்து வைத்தனர்.

அங்கு மொத்தமாக 351 கைதிகள் சிறைவைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 2027 ஆம் ஆண்டில் 15,000 கைதிகளுக்கான புதிய சிறைச்சாலைகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்