Paristamil Navigation Paristamil advert login

இளமைக்குத் தேவை உடல் அல்ல மனம்

இளமைக்குத் தேவை உடல் அல்ல மனம்

28 பங்குனி 2017 செவ்வாய் 17:43 | பார்வைகள் : 10635


 இளமையாக இருக்கவேண்டும் என்றுதான் எல்லோரும் கனவு காண்கிறார்கள். ஆனால் வயதாக ஆக அந்த கனவு தளர்ந்துகொண்டே வரும். பின்பு முதுமை உடலில் பல மாற்றங்களை கொண்டு வந்து சேர்க்கும். அதனால் சோர்ந்துபோக வேண்டியதில்லை. 

 
பிரபலமான பல நடிகைகள் இன்றும் இளமை மாறாமல் இருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்று யாராவது யோசித்ததுண்டா? அவர்கள் என்றும் இளமையாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை தீர்மானமாக எடுத்திருக்கிறார்கள். அவர்களுடைய ஆழ்மனது அதை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. அதுதான் உண்மை.
 
ஆமாம். நாம் இளமையாக இருக்க நம் மனம் தான் காரணம் என்கிறது ஆயுர்வேத மருத்துவ குறிப்புகள். அழகு சாதனங்கள் எதுவுமே நம் முதுமையை மறைக்க உதவாது. ஆனால் மனதிற்கு நாம் தரும் பயிற்சி நம்மை எப்போதும் இளமையாகவே வைத்திருக்கும். இதை அன்றும், இன்றும் பலர் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். 
 
 
 
இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் வாழ்ந்த பல யோகிகளும், சித்தர்களும் இந்த இளமை ரகசியத்தை கண்டுபிடித்து பலருக்கு தெரிவித்திருக்கிறார்கள். அந்தகால அரசிகள் ஆழ்மன தியானம், யோக கலைகளை பயின்று காலங்களை கடந்தும் இளமையாக வாழ்ந்து இருக்கிறார்கள். அவர்கள் இளமை என்பது மனதின் வெளிப்புறத்தோற்றமே என்கிறார்கள். இது நிரூபிக்கப்பட்ட உண்மை.
 
இன்றைய சூழ்நிலையில் வேலைப்பளு, டென்ஷன், கோபம், உடல் உபாதைகள், சரியான தூக்கமின்மை போன்ற பல தொந்தரவுகள் மனித வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ளன. இளம் வயதிலே மனம் சோர்ந்தால் உடல் முதுமையாகிவிடும். மாசு நிறைந்த காற்று, ரசாயன உணவு, சுற்றுப்புறச்சூழல் மாசு இவை எல்லாம் மனிதர்களை இளமையிலே முதுமைக்கு வழிகாட்டுகின்றன. பணத்தால் இளமையை தக்கவைக்க முடியாது. மனதால்தான் முடியும்.
 
மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது யோகநிலையில் ஒன்று. மனதை ஒருநிலைப்படுத்தும் போது அமைதியடைகிறது. அமைதி நிம்மதியை கொண்டு வந்து சேர்க்கிறது. நிம்மதியான சூழ்நிலையில் பிரச்சினைகள் எளிதாக்கப்படுகிறது. எதிர்காலத்தைப் பற்றிய நல்ல சிந்தனைகளும் நம்மிடம் தோன்றுகிறது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்