Paristamil Navigation Paristamil advert login

கூந்தலுக்கு அழகு தரும் தேங்காய் பால்..!

கூந்தலுக்கு அழகு தரும் தேங்காய் பால்..!

10 வைகாசி 2024 வெள்ளி 08:29 | பார்வைகள் : 1803


ஒவ்வொரு பெண்ணும் தனது தலைமுடியின் அழகை பராமரிக்க அதிகமாக மெனக்கிடுகிறாள். இதற்காக அவள் பலவிதமான பொருட்கள் மற்றும் குறிப்புகளை  பயன்படுத்துகிறாள். ஆனால் பல நேரங்களில் இவற்றின் முடிவுகள் அவள் விரும்பியபடி வருவதில்லை. 

அப்படியானால், கூந்தலின் அழகை அதிகரிக்க வேறு என்ன தான் செய்ய வேண்டும் என்று கவலைப்படுறீங்களா..? இதற்கு ஒரே வழி 'தேங்காய் பால்'.. என்னங்க சொல்றீங்க தேங்காய் பால் எப்படி கூந்தலின் அழகை அதிகரிக்க செய்யும் என்று யோசிக்கிங்களா..? ஆம்.. ஆனால் அதுதான் உண்மை. இதன் முழு விவரங்களை அறிய தொடர்ந்து படியுங்கள்.

தேங்காய் பால் பல குணங்கள் நிறைந்தது. தேங்காய் பாலில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இவை அனைத்தும் முகத்திற்கும் முடிக்கும் நன்மை பயக்கும். முகப் பொலிவை அதிகரிக்க தேங்காய் பால் பயன்படுத்தப்படுவது போல, கூந்தலின் அழகை அதிகரிக்கவும் பயன்படுகிறது. சரி வாங்க இப்போது தேங்காய் பாலை முடியில் எப்படி பயன்படுத்தலாம் என்று தெரிந்துகொள்ளலாம்.

பாதாம் எண்ணெய் மற்றும் தேங்காய் பால்: பாதாம் எண்ணெயுடன் தேங்காய் பாலை பயன்படுத்தலாம். தேங்காய்ப் பாலை இவ்வாறு தலை முடிக்கு பயன்படுத்தினால் கூந்தல் அழகு அதிகரிக்கும், முடி வளர்ச்சி அடையும். குறிப்பாக, முடி தொடர்பான பிரச்சினைகள் குறையும்.

இதை எப்படி பயன்படுத்த வேண்டும்?: ஒரு கிண்ணத்தில் தேங்காய் பால் மற்றும் சிறிதளவு பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி, பருத்தியின் முடியின் வேர்களில் தடவவும். இதை நீங்கள் இரவு தூங்கும் முன் செய்யவும். பிறகு காலை எழுந்ததும் தலைக்கு குளிக்கவும். வாரத்தில் 2 நாட்கள் இதை செய்யவும்.

தேங்காய்ப் பாலை முடி மசாஜ் செய்யவும் பயன்படுத்தலாம். இந்த வகை தேங்காய் பாலை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் கூந்தலின் அழகு அதிகரிப்பதை நீங்கள் காண்பீர்கள்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்