Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மருத்துவ துறைக்கு தெரிவான மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

இலங்கையில் மருத்துவ துறைக்கு தெரிவான மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

15 ஆனி 2024 சனி 11:19 | பார்வைகள் : 404


மருத்துவ துறைக்கு தெரிவான மாணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

காரைதீவைச் சேர்ந்த மாணவன் எஸ்.அக்சயன் (வயது-20) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார். 

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை மருத்துவத் துறைக்கு தெரிவான இரண்டு மாணவர்களுள் அக்சயன் ஒருவராவார்.

இவர் அண்மையில் வெளியான G.C.E  A/L 2023 (2024) பரீட்சையில் சித்திபெற்று மாவட்டத்தில் 23 வது இடத்தில் மருத்துவ துறைக்கு தெரிவாகியிருந்தார்.

அவர் தனது குடும்பத்தோடு மூன்று நாட்களுக்கு முன்பு உகந்த மலை முருகன் ஆலயத்துக்கு சென்று அங்கு தரித்துவிட்டு, நேற்றையதினம் வீடு திரும்பி வரும் பொழுது பொத்துவில் மற்றும் லாகுகலைக்கிடையிலுள்ள நீலகிரி ஆற்றிலே நீராடிய போது மூழ்கி உயிரிழந்துள்ளார்.  

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்