Paristamil Navigation Paristamil advert login

நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் மீது அபராதம் விதிப்பு

நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் மீது அபராதம் விதிப்பு

18 ஆடி 2023 செவ்வாய் 06:34 | பார்வைகள் : 5401


விம்பிள்டன் ஆடவர் இறுதிப் போட்டியில் நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் தோல்வியை தழுவினார்.

விம்பிள்டன் ஆடவர் இறுதிப் போட்டியில் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் கோபத்தில் தனது டென்னிஸ் மட்டையை உடைத்த செர்பிய வீரர் ஜோகோவிச் மீது பெருந்தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

செர்பியாவின் நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இளம் வீரர் கார்லோஸ் அல்கராஸ் இடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இந்த ஆத்திரத்தில் தமது டென்னிஸ் மட்டையை ஜோகோவிச் உடைத்தார்.

ஆனால் இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டு, 8,000 டொலர் அபராதம் விதித்துள்ளது விம்பிள்டன் டென்னிஸ் நிர்வாகம்.

சுமார் 1.2 மில்லியன் பவுண்டுகளை பரிசாக வென்றுள்ள ஜோகோவிச், அது விரக்தியை ஏற்படுத்திய தருணம் என அவர் தெரிவித்துள்ளார்.

அல்கராஸ் அருமையான விளையாட்டை வெளிப்படுத்தினார் எனவும், வெற்றி பெற தகுதியான வீரர் அவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

BBC One தொலைக்காட்சியில் சுமார் 11.3 மில்லியன் பேர்கள் இறுதிப் போட்டியை கண்டுகளித்துள்ளனர்.

டென்னிஸ் மட்டையை உடைத்தது மட்டுமின்றி, நடுவர் கடிந்துகொள்ளும் நிலைக்கும் ஜோகோவிச் தள்ளப்பட்டார்.

டென்னிஸ் மட்டையை உடைத்த நிலையில், விம்பிள்டன் ரசிகர்கள் கூக்குரல் எழுப்பி, எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

8,000 டொலர் அபராதம் என்பது தனியொரு டென்னிஸ் விளையாட்டு வீரருக்கு விதிக்கப்படும் பெருந்தொகை என்றே கூறப்படுகிறது.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்