Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு - நால்வர் பலி

அமெரிக்காவில்  துப்பாக்கிச்சூடு - நால்வர் பலி

16 ஆடி 2023 ஞாயிறு 06:26 | பார்வைகள் : 5873


அமெரிக்காவின் ஜார்ஜியா நகரில்  துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதில்  4 பேர் வரை  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி  கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்லாண்டாவின் தெற்கே ஒரு சிறிய சமூகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டதாக ஜார்ஜியாவில் உள்ள மாவட்ட அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அட்லாண்டாவிற்கு தெற்கே சுமார் 40 மைல் (65 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள ஹாம்ப்டனில் உள்ள ஒரு துணைப்பிரிவில் நேற்று காலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

4 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும் என்று மாவட்ட அரசாங்க செய்தித் தொடர்பாளர் மெலிசா ராபின்சன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  

இச்சம்பவம் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவாக உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.  

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்